குறிப்புகள்

  • கோழிப்பண்ணைக்கு தார்பாலின் வாங்க முடிவெடுத்து விட்டால் எங்களது கம்பெனிக்கு தகவல் தெரிவித்து, தார்ப்பாலின்களின் சாம்பிள்ஸ் தபால் மூலம் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு நீங்கள் ஜி எஸ் எம் (GSM), Thickness (திக்னஸ்), போன்றவற்றைத் தொட்டுப் பார்த்து, எந்த ஜிஎஸ்எம் மற்றும் கலர் வேண்டும் என்று தீர்மானிக்க ஏதுவாக இருக்கும்.
  • கோழிப் பண்ணை கூரைக்கு தார்ப்பாலின் வாங்க வேண்டும் என்றால், ஒரு இன்ச் (Inch) டேப் கொண்டு, மேற்கூரையை நீள வாட்டிலும், மற்றும் முக்கோணம் போன்ற அகல வாட்டிலும் அளக்க வேண்டும். முன்புறமும், பின்புறமும் சரிவாகக் கூரை இருந்தால், அதையும் சேர்த்து அளக்க வேண்டும். கம்பெனிக்கு, துல்லியமாக நீளம் மற்றும் அகலம் அளவுகள் கொடுக்க வேண்டும். (தார்ப்பாலின்கள் ஃபேக்டரியில் செய்யும் பொழுது, நடுவில் ஒட்டும் இடத்தில் உள்ள ஜாயிண்ட்ஸ் (JOINTS) மற்றும் ஓரத்தில் மடித்துத் தைப்பதினால் (Hemmings) சிறிது அளவு குறையும்.) எனவே நாங்கள் நீங்கள் கொடுக்கும் அளவை சிறிதளவு மாற்றம் செய்து கொட்டேஷன் கொடுப்போம்.
  • நாங்கள் கொட்டேஷன் கொடுத்த பிறகு அதில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி அக்கவுண்ட் நம்பருக்கு நீங்கள் உங்கள் ஊரிலிருந்து உங்கள் வங்கி மூலம் பணம் செலுத்தலாம். அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள G-Pay நம்பரில் நீங்கள் பணத்தைச் செலுத்தலாம்.
  • உங்களது சரக்கு, எந்த லாரி மூலம் அனுப்ப வேண்டும் என்று தெரியப்படுத்தவும்.
  • நாங்கள் ஓரிரு நாளில், உங்களுக்குச் சரக்குகள் லாரி மூலம் அனுப்பி வைப்போம். எங்கள் ஊருக்குச் சரக்குகள் வந்தவுடன் லாரி வாடகை கொடுத்து சரக்கைப் பெற்றுக் கொள்ளவும்.
  • லாரியில் சரக்குகள் புக்கிங் செய்த பிறகு, நீங்கள் லாரி அலுவலகத்தைப் பின்னிட்டு தொடர்பு கொள்ளலாம். லாரிகள் தாமதமாக டெலிவரி செய்தால் அதற்கு எங்களது கம்பெனி நிர்வாகம் பொறுப்பேற்காது. லாரியினால் ஏற்படும் தாமதங்களுக்கு கம்பெனியை குறை சொல்ல வேண்டாம். அப்படி உங்களுக்குச் சரக்குகள் மிகவும் அவசரமாகத் தேவைப்பட்டால் நேரில் வந்து எங்களது அலுவலகத்திலிருந்து சரக்குகளைப் பெற்றுக் கொண்டு செல்லலாம்.
  • முழு பணம் செலுத்திய பிறகு மட்டுமே உங்களது தார்ப்பாலின், உற்பத்தி துவங்கப்படும். நாங்கள் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவில் சரக்குகளை அனுப்பி வைத்து விடுவோம். மாலை வேலைகளில் மிகவும் தாமதமாக, ஆர்டர் கொடுத்தால் அன்றைக்கு சரக்குகள் அனுப்புவது சிரமமாகும். எனவே அவை அடுத்த நாள் தான் அனுப்பி வைக்கப்படும்.
  • சரக்குகள் அனுப்பி வைத்த பிறகு மறுநாள் காலை 10 மணிக்கு மேல் உங்களுக்கு லாரி ரசீது வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு லாரி அலுவலகத்தை தொடர்பு கொண்டு சரக்குகளை பெற்றுக் கொள்ளலாம்.
  • லாரியில் சரக்குகள் அனுப்பும்போது, சரக்குகள் காணாமல் போனாலோ, அல்லது சரக்குகள் டேமேஜ் செய்யப்பட்டிருந்தாலோ, நீங்கள் லாரி அலுவலத்தோடு தொடர்பு கொண்டு அதற்கு தீர்வு கண்டுகொள்ள வேண்டும். லாரிகளில் கொக்கி போட்டாலோ, அல்லது வேறு ரூபத்தில் சரக்குகள் காயப்பட்டாலோ, எங்களது கம்பெனி நிர்வாகம் அதற்கு பொறுப்பேற்காது. (ஆனால் இதுவரை அப்படி ஆனது இல்லை).
  • இன்வாய்ஸ் காப்பி / பில் காப்பி பார்சலுக்குள் வைக்கப்பட்டிருக்கும் . அதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
  • ஜி எஸ் டி பில் வேண்டும் என்றால், அதற்கு முன்கூட்டியே தங்களது GST நம்பரை எங்களுக்கு கொடுத்து விட வேண்டும்.
  • ஆர்டர் செய்யும் போது சரக்குகளின் GSM, கலர், இறுதி அளவு, வளையம் போடும் இடைவெளி, மேலும் கீழும் கயிறு வைத்து செய்ய வேண்டுமா / இல்லையா, அல்லது பைப் செருகும்படி, (Provisions) அமைப்பு தேவையா என்பதையும் தெளிவாக கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.
  • எப்பொழுதும் தங்கள் தேவைகளுக்கு, மிகவும் துல்லியமான அளவுகளை கொடுக்கவும்.